வௌிநாட்டு நாணயத் தாள்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

மாளிகாவத்தையில் வௌிநாட்டு நாணயத் தாள்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்கள் 88 லட்சம் ரூபா பெறுமதியானதென பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தை மற்றும் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்த 31 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் ஜப்பானிய யென், கனேடிய டொலர் மற்றும் ஸ்டேர்லிங் பவுன் என்பன அடங்குகின்றன.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்