அமெரிக்க விமானம் அனுமதியுடன் வந்ததா – விசேட தொகுப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த அமெரிக்காவின் சரக்கு விமானம் முன் அனுமதியுடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு எமக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அந்த விமானம் உரிய வான்மார்க்கத்தில் பறந்து பின்னர் தேவையான பொருட்கள் மற்றும் சேவையை பெற்றுக் கொள்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு எமக்கு அனுப்பியுள்ள இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் பல வேறுபாடுகளை காண முடிகின்றது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய வான்மார்க்கத்தில் பயணித்து இடை நடுவில் என குறிப்பிடப்பட்டுள்ளமை முதலாவது விடயமாகும்.

இந்த விமானம் கடந்த 11 ஆம் திகதி பிரங்பேர்ட்டிலிருந்து பஹ்ரேயன் நோக்கி பயணித்துள்ளதாக விமானத்தின் தரவுகள் இருந்து தெரிய வருகின்றது.

பின்னர் அன்றைய தினமே 5 மணித்தியாளங்கள் பயணித்து இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து இந்த விமானம் ஐக்கிய அரபு இராஜியத்தின் சுஜைரா விமான நிலையத்தை நோக்கி பயணித்துள்ளது.

எனினும் பஹ்ரேய்னில் இருந்து ஒரு மணித்தியால விமான பயண காலத்தில் சுஜைரா விமான நிலையத்தை அடைய முடியும்.

அதன் படி உரிய விமான மார்க்கத்தில் பயணித்து இடை நடுவே இந்த விமானம் இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படும் விடயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தகவல்களை பெற்றுக் கொண்டு பாதுகாப்பு அமைச்சு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டமைக்கான காரணம் பொருட்கள் மற்றும் சேவையை பெற்றுக் கொள்வதற்கு என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் எமது நாட்டின் ஒரு தொகை ஆடையை ஏற்றுமதி செய்வதற்காக இந்த விமானம் இலங்கைக்கு வந்ததாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை எமக்கு குறிப்பிட்டது.

அதன் படி எமக்கு கடிதத்தை அனுப்பியிருந்த பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் நாம் இது குறித்து வினவிய போது கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் முரண்பாடுகள் உள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

உரிய முறையில் அறிவித்து விட்டு இந்த விமானம் வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு எமக்கு அனுப்பியிருந்த கடித்ததில் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் விமானம் வந்த திகதி தொடர்பில் நாம் வினவிய போது விமான நிலைய அதிகாரிகள் விமானம் வந்தததை மாத்திரம் உறுதிப்படுத்தியடுத்துடன் அதில் கொண்டு வந்த பொருட்ககள் தொடர்பில் தகவல் இல்லை என தெரிவித்தனர்

இந்த விமானம் தொடர்பில் எதுவும் தமக்கு தெரியாது என அவ்வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிவில் செயற்பாடுகளை மேற்கொண்ட ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்தது.

விமான நிலையத்தில் இருந்து வௌியில் கொண்டு வரும் பொருட்களை பரிசீலிக்கின்ற போதிலும் விமானத்திற்குள் இருக்கும் பொருட்கள் பரிசீலிக்கப்படுவதில்லை என இலங்கை சுங்கம் எமக்கு குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்காவின் Western Global Airlines என்ற சரக்கு விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான McDonnell Douglas 11 ரக விமானம், நேற்று முன்தினம் அதிகாலை 3.47 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்தது.

அமெரிக்க தயாரிப்பான இந்த விமானம், அதிகளவான பொருட்களுடன் நெடுந்தூரம் பயணிக்கக்கூடிய வசதிகளை கொண்டமடைந்துள்ளது.

WGN 1710 இலக்க விமானம், பஹ்ரேனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தது.

ஜேர்மனியின் Frankfurt இல் இருந்து பஹ்ரேனுக்கு இந்த விமானம் பயணித்துள்ளது.

ஜூலை 5 ஆம் திகதி கட்டார் விமான முகாமிற்கும் ஜூலை 2 ஆம் திகதி இத்தாலியின் கட்டலீனா முகாமற்கும் இந்த விமானம் பயணித்துள்ளது.

அத்துடன் கடந்த கால பகுதிகளில் இந்த விமானம் அமெரிக்க முகாம் அல்லது இராணுவ தளங்களை அண்மித்த நகரங்களுக்கு பயணித்துள்ளது.

விமானத்திற்கு சொந்தமான Western Global Airlines நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தை பரிசீலிக்கும் போது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்களின் பிரதான கொடுக்கல் வாங்கள் தரப்பு என தெரிய வருகின்றது.

அதனால் இந்த விமானம் எக்ஸா உடன்டிக்ைக்கு ஏற்ப அமெரிக்க இராணுவத்திற்கு பொருட்களை ஏற்றி வந்த விமானமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்