புதிய மெகசீன் சிறைச்சாலையின் அத்தியட்சகர் தேவதாசனை மிரட்டல்

நீ கொடுக்கும் கடிதங்களை நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்குவது எனது வேலையல்ல. இவ்வாறு நீ கடிதங்களை அனுப்பவும் கூடாது.  உண்ணாவிரதமிருக்க முயற்சித்தால் உன்னை தனிச்சிறையில் அடைப்பேன்.”
இவ்வாறு புதிய மெகசீன் சிறைச்சாலையின் அத்தியட்சகர்  தேவதாசனை மிரட்டியிருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி யார்?
என்ன நடந்தது?
நெல்லியடி கரவெட்டி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் கணசபை தேவதாசனுக்கு தற்போது வயது 62.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் #கொழும்பு ரயில் நிலைய குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இரு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
குறித்த இரு வழக்குகளிலும் #அரசியல் கைதியான தேவதாசனுக்கு ஆதரவாக எந்தவொரு #சட்டதரணியும் ஆஜராகவில்லை. சட்டத்தரணியை வைத்து வழக்கை வாதாடுமளவுக்கு அவரிடம் #வசதியும் இல்லை.
#இருபிள்ளைகளின் தந்தையான தேவதாசன், விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் தனக்கு தானே வழக்கை வாதமுடியும் என்பதாலும், வருமையாலும், குறித்த இரு வழக்குகளையும் #ஒற்றை மனிதராக வாதாடியிருக்கிறார்.
இதனால் அவருக்கு சார்பான ஆதாரங்களையும், சாட்சிகளையும் திரட்ட முடியாது  வழக்கிலும் வாழ்கையிலும் தோற்றுபோன? அந்த மனிதருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், 20 வருட கடூழிய சிறைதண்டனை வழங்கியிருக்கிறது.
தன்னை எப்படியாவது நிரபராதியென நிரூபிக்க வேண்டுமென்பதற்காக கொழும்பு மேல்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.
தனக்கு தேவையான சாட்சிகள், ஆதாரங்கள் என்பவற்றை திரட்டுவதற்காக தனக்கு பிணை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அவர்,
இது தொடர்பில் நீதி அமைச்சின் அதிகாரிகளை சந்திக்க வேண்டுமென மூன்றுக்கு மேற்பட்ட முறை கடிதங்களை சிறைச்சாலை அதிகாரிகளூடாக வழங்கியிருக்கிறார்.
எனினும், அந்த கடிதங்கள் உரிய அதிகாரிகளின் கைகளுக்கு சென்று சேர்ந்துள்ளதா என்பது தெரியவில்லை.
“நீ கொடுக்கும் கடிதங்களை நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்குவது எனது வேலையல்ல. இவ்வாறு நீ கடிதங்களை அனுப்பவும் கூடாது.  உண்ணாவிரதமிருக்க முயற்சித்தால் உன்னை தனிச்சிறையில் அடைப்பேன்.”
இவ்வாறு புதிய மெகசீன் சிறைச்சாலையின் அத்தியட்சகர்  தேவதாசனை மிரட்டியிருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிணை வழங்ககோரி இன்று உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேவதாசன் இன்று மாலை 5 மணியளவில்  எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத தண்டனை சிறையில் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்.
“சிறைக்கைதிகளும் மனிதர்களே”

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்