கூட்டமைப்புக்குள் ‘சிண்டு முடியும்’ விஜயகலா

உண்மைக்குப் புறம்பான , திரிவுபட்ட கருத்துக்கள் மூலம்  கூட்டமைப்பினர் மத்தியில் பிளவினை ஏற்படுத்த , ஐ.தே.க நாடாளுமன உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் முயற்சிப்பது அம்பலமாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு , பொது அரங்கத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்போது உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் ” கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் முயற்சியாலேயே இந்த அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.ஆயினும் , கூட்டமைப்பைச் சேர்ந்த இன்னொரு

எம்.பியான சரவணபவனின் , கோரிக்கையின் பேரிலேயே குறித்த அரங்கத்துக்கான நிதியினை புனர்வாழ்வு அமைச்சு ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அதைத் திரித்து,கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையே முரண்பாட்டை உருவாக்க , வேண்டுமென்றே விஜயகலா தவறான தகவலை வெளியிட்டுள்ளார்/ ஆனால் அவரது கருத்தை யாழ்.மாவட்ட செயலகமும், புனர்வாழ்வு , மீள்குடியேற்ற அமைச்சும் மறுத்துள்ளதோடு, சரவணபவன் எம்.பியின் முயற்சியாலேயே குறித்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டமைக்கான எழுத்துமூல ஆதாரங்களையும் வெளியிட்டு, விஜயகலாவின் ‘சிண்டுமுடியும்’ காரியத்தை அம்பலமாக்கியுள்ளன.
சரவணபவன் எம்.பியின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ,இதே பாடசாலையின் விளையாட்டரங்குக்கு   தான் அடிக்கல் நாட்ட எடுத்த முயற்சி கைகூடாமல் போன காழ்ப்புணர்ச்சியாலேயே இவ்வாறு விஜயகலா , தவறான தகவலை வெளியிட்டாரென பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்