அரசியலமைப்பு – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது!

அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும்  25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்களை மீள ஆரம்பிக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த விவாதத்தைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்