மகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் – மஹிந்த

மகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காலியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பௌத்த மதகுருமார் சிலர் சிகரட் பிடிப்பதைப் போன்ற காட்சிகளை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிறிது நேரத்தில் அதனை நீக்கி இருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்தோடு, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அவருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சிங்களே அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

அதற்கமைய, பொலிஸ் தலைமையகம் முன்னால் நாளை போராட்டம் நடத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த செயற்பாடு தொடர்பான உரிய விளக்கத்தை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் ஒன்றின் மூலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்து.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்