இலங்கை வானில் தென்படவுள்ளது இவ்வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம்!

இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் இலங்கை வானில் தென்படவுள்ளது.

அதற்கமைய இந்த சந்திரகிரகணம் இன்று (செவ்வாய்கிழமை) இரவு பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவிற்கு பின்னர், 17 ஆம் திகதி அதிகாலை 12.13 இற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளது. 17ஆம் திகதி அதிகாலை 5.47 அளவில் சந்திர கிரகணம் நிறைவுபெறவுள்ளது.

இதற்கு பின்னர் 2021ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் இவ்வாறு சந்திர கிரகணம் தென்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்