போதைப் பொருளின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!!

போதைப் பொருள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று (15) வவுனியா பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுபாஜினி சிவதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் வளவளராக கலந்துகொண்டு போதைக்கு எதிரான கருத்தரங்கை நடத்தியிருந்தார்.

தனிமனித மாற்றமே குடும்ப மாற்றம் குடும்ப மாற்றமே சமுதாய மாற்றம் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வை  வவுனியா உப பிரதேச செயலாளர் திருமதி சஜீவன் பிரியதர்சினி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

போதையால் நடைபெறும் துஸ்பிரயோகங்கள், குடும்ப வன்முறைகள், போதைக்கு அடிமையானவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது மற்றும் போதைக்கு எதிராக பொலிசார் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வவுனியா பொது மக்கள் பொலிஸ் பிரிவு அதிகாரி ஐ.பி.அரவிந்த தலைமையிலான பொலிசார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்