ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி முதல் நாளை மறுதினம் மாலை 4 மணிவரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து, அரசினால் கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவைக்கு சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

எனினும் அதற்கான அனுமதியை அமைச்சரவை இதுவரை வழங்கவில்லை என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று தமது கோரிக்கைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்