சம்பள விவகாரம் – அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க முடிவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்துடன் 50 ரூபாயை மேலதிக கொடுப்பனவாக இணைப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த யோசனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளபோதும், அது இழுபறியில் உள்ளது.

இதுதொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் முரண்பட்டிருந்த நிலையில், அண்மையில் இதுகுறித்து முடிவுகளை முன்வைப்பதற்காக 3 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரங்களில் முறைப்படி அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெறாத நிலையில், அந்த குழுவின் அறிக்கை முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த குழுவின் அறிக்கை முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்