சிங்களவர்கள் இல்லாத இடத்தில் பௌத்த மதம் திணிக்கப்படுகிறது – சிறிதரன்

சிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தின் இருமாடி வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்து ஆலயங்கள் அகற்றப்பட்டு அங்கே பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

பௌத்தர்கள் இல்லாத வடக்கு கிழக்கில் புதிதாக விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பெளத்த மதம் திணிக்கப்படுகின்றது.

அரசாங்கத்துடன் இணைந்து சில விடயங்களை நாம் செயற்படுத்திக்கொண்டாலும் எமது இனத்தால் சுயமாக செயற்பட முடியவில்லை. தமிழ் மக்கள் தற்போதும் இந்த நாட்டில் அடிமைகளாகவே வாழ்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்