மாகாணசபைத் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்க!! – மைத்திரியிடம் தேர்தல் ஆணைக்குழு அவசர கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அடிப்படை ஏற்பாடுகளைச் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவையின் உறுப்பினர்களை நேற்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசமைப்பின் 33 ஆவது விதந்துரைக்கு அமைவாகத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய, அதனைச் செய்யுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தேர்தல் ஆணைக்குழு அரசிடம் கோரிக்கை விடுத்தது என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்