கூட்டமைப்பின் ஆதரவுடனேயே வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படுகின்றன – சிவசக்தி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடனேயே வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு கிழக்கில் 1000 பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் பல மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த வரவு செலவு திட்டத்திற்கு கூட்டமைப்பினரும் ஆதரவளித்துள்ளனர். ஆனால் தற்போது வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு அவர்களே எதிர்ப்பு வெளியிடுகின்றனர்” என மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்