வடக்கு மார்க்கத்தின் ரயில் சேவையில் தாமதம்!

வடக்கு மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அநுராதபுரம் அங்கன பகுதியில் ரயில் எஞ்சின் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தடம்புரண்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வவுனியாவிலிருந்து கோட்டை வரை பயணிக்கும் ரயில் தாமதமடைந்துள்ளது.

எஞ்சினை தண்டவாளத்தில் நிறுத்தும் வரை வடக்கு மார்க்கத்தினூடான ரயில் சேவை தாமதமடையும் என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்