சுன்னாகம் லயன்ஸ் கழக ஆடி விழா தெல்லிப்பழைச் சந்தியில் நாளை!

சுன்னாகம் லயன்ஸ் கழகமும் தெல்லிப்பழைத் தமிழ்ச் சங்கமும் இணைந்துநடத்தும் ஆடிப்பிறப்பு ஆனந்தக்கூழ் நிகழ்வு நாளை (17-07-2019) புதன்கிழமை மாலை 6 மணிக்கு தெல்லிப்பழை சந்தி பஸ் தரிப்பு நிலையத்தில் நடைபெறும்.

சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவரும் தெல்லிப்பழைத் தமிழ்ச் சங்கத் தலைவருமாகிய லயன் ச.சிவானந்தராசா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு ஆசியுரையை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும் சிவபூமி அறக்கட்டளைத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகனும் பிரதம விருந்தினராக லயன்ஸ் கழக நூற்றாண்டு ஆளுநர் லயன் வைத்தியர் வை.தியாகராஜாவும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனும், தெல்லிப்பழைத் தமிழ்ச்சங்கப் போசகர் தேசகீர்த்தி லயன் ச.ஆறுமுகநாதனும் கலந்துகொள்வர்.

சிறப்பு நிகழ்வுகளாகத் தெல்லிப்பழைத் தமிழ்ச்சங்கக் கலைஞர்கள் வழங்கும் நாட்டார் பாடல்கள் இசை அரங்கும், ஒயிலாட்ட நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்