ஹேமசிறியிடம் 9 மணிநேரம் வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று முற்பகல் 10 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இரவு 7 மணி வரை வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்