கஜேந்திரா அபாரம் ! KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…

அமரர்களான திரு.திருமதி.மகாலிங்கசிவம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் காரைதீவு விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிரிக்கட் சுற்றுப்போட்யின் அரைஇறுதி போட்டி இன்று செவ்வாய்க்கிழமை காரைதீவின் பழம்பெரும் கழகங்களான காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விவேகானந்தா விளையாட்டு கழகம் ஆகியன பலப்பரீட்சை நடாத்தியிருந்தது.

ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா விளையாட்டு கழகம் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 135ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் கஜேந்திரா 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் மதிராஜ் 19 ஓட்டங்களை விட்டுகொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

136 என்ற ஒட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ksc ஆரம்பம் முதல் ஓட்டங்களை பெறுவதில் சற்றுதடுமாற்றத்தில் இருந்தது.

இருப்பினும் 5ஆவது விக்கட்டுக்காக ஜோடி சேர்ந்த சுலக் ஷன் மற்றும் ரகு ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இருப்பினும் VSC அணியின் அபார பந்து வீச்சினால் இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 21 ஓட்டங்களினால் ksc அணி தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் சுலக் ஷன் 38 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.பந்துவீச்சில் அனோஜன் 31 ஓட்டங்களை விட்டுகொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக VSC அணியின் கஜேந்திரா தெரிவுசெய்யப்பட்டார்.

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் VSC அணி இறுதிபோட்டிக்கு தெரிவானதுடன் ,KSC அணி தொடரில் இருந்து வெளியேறியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்