கன்னியா, நீராவியடி, கந்தப்பளை மதப் பதற்றம்:

கன்னியா, நீராவியடி, கந்தப்பளை மதப் பதற்றம்:
அனைத்துத் தமிழ் எம்.பிக்களையும்
இன்று சந்திக்கிறார் மைத்திரிபால!

கன்னியா உள்ளிட்ட அவசர விவகாரங்களை ஆராய இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளார்.

கன்னியா, நீராவியடி, கந்தப்பளை உள்ளிட்ட இடங்களில் மதப் பதற்றம் தோற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இந்தச் சந்திப்புக்கு அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்