மலையகத்தில் மழையுடனான காலநிலை காணப்படவதனால் சாரதிகள் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்

மலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால் மலையகப்பகுதியில் உள்ள வீதிகளில் பல இடங்களில் வழுக்கும் நிலை காணப்படுகின்றன.வீதி வழுக்கும் நிலை காரணமாக நேற்றைய தினம் பல விபத்துக்கள் எற்பட்டுள்ளன.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்க பாதைக்கு அருகாமையிலும் ஹட்டன் கொழும்பு பிரதான பாதையில் வூட்லண்ட் பசார் பகுதியிலும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே குறித்த வளைவுகள் நிறைந்த வீதிகளை பயன்படுத்து சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை குறைத்து கொள்ளலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வூட்லண்ட்பசார் பகுதியில் நேற்று (17) திகதி மாலை சுமார் 2.00 மணியளவில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இவ்வீதியூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டன.
நுவரெலியா பகுதியிலிருந்து வட்டவளை ஊடாக மஸ்கெலியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியொன்றும் காலியிலிருந்து நுவரெலியா நோக்கு சென்றுகொண்டிருந்த மற்றுமொரு லொறியொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படாத போதிலும் சுமார் 30 நிமிடங்கள் வரை இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.நுவரெலியா பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்று கொண்டடிருந்த லொறியினை செலுத்திய சாரதி குறித்த வளைவில் திருப்பும் போது வழுக்கியதனால் லொறி கட்டுப்பாட்டினை இழந்து குறித்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்