பெல்மடுல்லை பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

பெல்மடுல்லை பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டுத்துவக்கிற்கு வெடிமருந்தை நிரப்பியபோது, துவக்கு வெடித்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

29 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பெல்மடுல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்