விழாக்கோலம் பூண்டது காரைதீவு ! மாவடிக் கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கை வரலாற்றுப் புகழ்மிக்க காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவின் இறுதிநாள் தீர்த்தோற்சவமானது இன்று 18ம் திகதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.

கடந்த 03.07.2019ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மாவடிக் கந்தனின் ஆடிவேல் விழாவானது இன்று 18ம் திகதி ஆலயத்திலிருந்து ஆரம்பமான ரதபவனி மற்றும் காவடிகள் ஊர்வலமாக சமுத்திரக்கரையை அடைந்ததும் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்தது.

மேலதிக படங்கள் எமது Tamilcnn East முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்