தற்போதைய ஆட்சியிலேயே தமிழ் பிரதேசங்கள் அதிகமாக பௌத்தமயமாக்கப்படுகிறது – சி.வி.கே.

வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் வாழும் பகுதிகள் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலேயே அதிகமாக பௌத்தமயமாக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழரின் அடையாளங்களை அழித்து பௌத்தமயமாக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அடாவடித்தனங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையிலும் அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமலும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுவொரு சிங்கள பௌத்த மேலாதிக்க நோய் என்று குறிப்பிட்டுள்ள அவர், எங்கள் மத உணர்வுகளில் தலையீடு செய்கின்ற இந்தநோய் குணப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்