நிதி ஒதுக்கீட்டினூடாக ஊழலற்ற அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் – ஸ்ரீநேசன்

நிதி ஒதுக்கீடுகளைக் கொண்டு ஊழலற்ற அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கம்பெரலிய எழுச்சித்திட்டத்தினூடாக 50 கோடி ரூபாய் பணம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனைவிட அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல ஊடாக வீதி அபிவிருத்திக்கு 7 கோடி ரூபாய் பணமும் அமைச்சர் கபீர் ஹாசிம் ஊடாக 5 கோடி ரூபாய் பணமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனைவிட வரவு செலவுத்திட்டத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நான்கரைக் கோடி ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தோடு, நான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்ததன் பின்னர் எனக்கு இதுவரையில் மொத்தம் 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடுகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு ஊழலற்ற அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்