வவுனியா, சைவப்பிரகாசா மகளிருக்கு சிவமோகன் நிதியில் பார்வையாளர் கூடம்

வவுனியா, சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மைதானத்தில் பார்வையாளர் கூடம் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இந்த பார்வையாளர் கூடத்தின் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் பா. கமலேஸ்வரியின் தலைமையில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, குறித்த பார்வையாளர் கூடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் திறந்து வைத்தார்.

முன்னாள் அதிபர் கனகரத்தினத்தின் பெயர் சூட்டப்பட்ட இந்த பார்வையாளர் கூடத்தின் திறப்பு விழாவில் பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்