வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிட மாட்டேன் – மனோ

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லையென்ற முடிவிற்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அவசர பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதோடு, இதன்போது பல முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் இந்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மனோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனிமேல் தலையிடுவதில்லையென நேற்றிரவு முடிவெடுத்தேன். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளை கேட்காமல் இனிமேல் தலையிடுவதில்லை.

இனிமேல் அமைச்சு சார்ந்த விடயங்களை மட்டும் செய்வேன். மக்கள் நலன்சார்ந்து நான் செயற்படுவதை சிலர் தவறாக அர்த்தப்படுத்துவதாலேயே மனவருத்தத்துடன் இந்த முடிவை எடுத்தேன்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்