மரம் முறிந்து விழுந்ததில் மலையகத்தின் சில வீதிகளில் சிக்கல்!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் முறிந்து விழுந்தமையினால் குறித்த பகுதியில் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.

மலையகத்தில் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் குறித்த பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பலத்த காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து, இவ்வீதியில் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இம்மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் பிரதேசவாசிகள் மற்றும் கொட்டகலை பிரதேச சபை ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதால்  வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்