கறுப்பு ஜுலை – பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி லண்டனில் சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்