வட, கிழக்கில் தமிழருக்கான தனி அரசைப் பிரித்து தாருங்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் பெற்றுத் தரவேண்டும் என்று அகில இலங்கைஅரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

கல்முனையில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் ஞாயிற்றுக் கிழமை சந்தித்துப் பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில் …
இலங்கையில் மதவாதமும், இனவாதமும் மேலோங்கிக் காணப்படுகின்ற காலத்தில் நாம் இருக்கின்றோம். இங்கு சிங்கள இராட்சியத்தைக் கொண்டுவர பிக்குகள் தீவிரமாக முயற்சிக்கின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ தயகத்தைக் கோரி மூன்று தசாப்த காலங்களாக தமிழர்கள் போராடியுள்ளனர்.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் புலிகளின் தியாகங்கள் அளப்பெரியவை, அவர்களின் இழப்பு தமிழர்களைப் பொறுத்தவரை ஈடு செய்யமுடியாதது. தமிழர்கள் இன்று போர்க் கலவரம்,இயற்கை அனர்த்தம் ஆகியவற்றால் அனைத்தையும் இழந்து அநாதரவாளர்களாகி உள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகானங்களை எமக்குப் பிரித்து தந்து விட்டு சிங்களை தேசத்தை நிலை நாட்டுவார்களானால் அதை நாம் மனப்பூர்வமாக மகிழ்ச்சியாக வரவேற்கின்றோம். இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ அரசாங்க ஐக்கிய நாடுகள் சபை , சர்வதேச சமூகம் ஆகியன பெற்றுத் தரவேண்டும். இங்கு முஸ்லிம் சகோதரர்களும் சகல உரிமைகளுடனும் தமிழர்களோடு வாழ வேண்டும்.
ஜனதிபதி மைத்திரி பால சிறிசேன இனவாதிகளின் கைப்பொம்மையாக இயங்குகின்றார். அதன் உச்சக் கட்டமாகத்தான் புலிகள் ஹெரோயின் கடத்தினார்கள் என்று அப்பட்டமானம் பொய்யை அவிழ்த்து விட்டிருக்கின்றார். புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியது. புலிகளை மக்கள் ஏன பிரதிநிதிகளாக சர்வதேச சமூகமே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் ஜனதிபதியின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் கேவலப் படுத்தியுள்ளது.
எமது சங்கம் இதனை வன்மையாக கண்டிக்கின்றது. இக்கூற்றை அவர் வாபஸ் பெறவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.

தமிழ் பேசும் சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளிலே மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார். அவரை ஜனாதிபதியாக கொண்டுவந்ததற்காக இரு சமூகங்களும் இப்போது வெட்கமும் வேதனையும் அடைகின்றது. இவர் போன்ற ஒருவர் இனி நாட்டுக்கௌ தலைவராக வரக்கூடாது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி தாங்கி நிற்பதும் தமிழ் பேசும் சமூகம்தான்.
அவரும் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை அறவே அற்றுப் போய்விட்டது. சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் சிறுபான்மை மக்களைப் புரிந்து கொண்டவர்களாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்