தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை – கண்டன போராட்டம்

கன்னியா போராட்டத்தின் போது (16.07.2019) தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை தொடர்பாக யாழ் கைலாச பிள்ளையார் முன்றலில் நாளை (19.07.2019) வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்குகண்டன போராட்டத்திற்கு சைவ மகா சபை உள்ளிட்ட சைவ அமைப்புக்கள் அழைப்பு.

கன்னியா போராட்டத்தின் போது ஆதீனத்தின் மீது பொலிசார் முன்னிலையில் தேநீர் வீசி தாக்குதல் நடாத்திய காடையர்கள் கைது செய்யப்படாமை கடும் கண்டனத்திற்குரியது.

சாத்வீகமான முறையில் கன்னியாவின் தமிழர் பூர்வீகத்தை பாதுகாக்கும் போராட்டத்தை வழிநடத்திய தமிழர் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவராகிய வணக்கத்துக்குரிய தென் கைலை ஆதீனத்தின் மீது வன்ம உணர்வோடு பொலிஸ் வாகனத்துக்குள்ளேயே வைத்து தேநீர் வீச்சினை மேற்கொண்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையுமில்லை.
போராட்டத்தை அகிம்சை முறையில் மேற்கொண்ட தமிழ் மக்களை கொடுங்கரங்கள் கொண்டு அடக்க முற்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஒட்டு மொத்த தமிழ் மத, அரசியல், சமூக தலைமைகளும் தங்கள் கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்த வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.

அனைவரும் ஒன்றிணைந்து எமது சமய தலைவர்களில் ஒருவரும் தமிழர்களின் பூர்வீக கன்னியாவை மீட்கும் போராட்டத்தின் முதன்மை வழிகாட்டியுமான தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாருக்கு இழைக்கப்பட்ட கொடுஞ் செயலுக்கு நீதி வேண்டி எமது கண்டன குரலை பதிவு செய்ய யாழ் கைலாச பிள்ளையார் முன்றலில் நாளை மாலை ஒன்றுகூடுவோம்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்