ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கு பயங்கரவாத அமைப்பு நிதியுதவி – FCID தகவல்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழத்திற்கு சவுதி அரேபிய அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் மூலம் 1757 கோடி ரூபாய் வரையில் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக நிதி குற்ற விசாரணை பிரிவு நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பணம் இலங்கை அரச வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பினால் வழங்கப்பட்ட குறித்த பணம், பல்கலைக்கழக நிர்மாணிப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதா அல்லது பயங்கரவாத செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்