அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (19) காலை கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் அறுகம்பை பீச் ஹோட்டல் ஒன்றில் இடம் பெற்றது.

பிரதேச அபிவிருத்திகள், குறைபாடுகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் முக்கியஸ்தர்களுடன் கேட்டறிந்து கொண்டார்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் வருகை தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது.

இதில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்