அரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் யாவும் சித்திரவதை மூலம் பெறப்பட்டவை எனவும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் முன்வராத காரணத்தால் தன்னுடைய வழக்கை தானே வாதாடிய குறித்த கைதி, வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பிணை கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்