மன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

மன்னார் மதவாச்சி வீதியை அண்மித்த பகுதியில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்போது அவர் செலுத்திய பாரவூர்தியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சி மன்னார் வீதியில் நெல் ஏற்றிச்செல்வது போன்று பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தியை பொலிஸார் சோதனையிட்டபோதே, குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்