வவுனியாவில் அதிகாலை நேர்ந்த சோகம்!

வவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது.

கொழும்பில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை யாழ். நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டே குறித்த யானை உயிரிழந்துள்ளது.

இப்பகுதியில் குறித்த யானை தினமும் ரயில் கடவையை கடந்து செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் யானை தொடர்பான சமிக்ஞைகள் இல்லாமையே இந்த விபத்திற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இம்மாதத்தில் தாண்டிக்குளம் பகுதியிலும் மூனாமடு பகுதியிலும் 15க்கும் மேற்பட்ட மாடுகள் ரயிலுடன் மோதி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்