அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முற்போக்குத் தமிழர் கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘போராளிகள் பயங்கரவாதிகள் அல்லர்’, ‘பயங்கரவாதி என்ற போர்வைக்குள் இன்றும் ஏன் சிறைக்குள் எம்மவர் மாத்திரம்’, ‘அரசை காப்பாற்ற நினைப்பவர்கள் அரசியல் கைதியை காப்பாற்று’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியுள்ளனர்.

மேலும் தற்போதைய அரசாங்கம் தமிழ் பிரதிநிதிகளின் ஆதரவிலேயே தங்கியுள்ளதென்றும் எனினும் தமிழர்கள் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையென்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்