பரமேஸ்வரா வித்திக்கு சுமனால் கலையரங்கு!

வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் திறந்தவெளி கலையரங்கு திறந்துவைக்கப்பட்டது.

துரித கிராம அபிவிருத்தி திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிச் சமூகத்தினர் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தக் கலை அரங்குக்கான நிதி ஒதுக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், கல்விப் பணிப்பாளர்கள், கல்லூரிச் சமூகத்தினர் எனப் பலர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்