அரச நிறுவனங்களின் செலவீனங்களை குறைக்குமாறு சுற்றறிக்கை!

அரச நிறுவனங்களின் செலவீனங்களை குறைக்குமாறு அறிவுறுத்தல் விடுத்து நிதி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அரசின் வருமானத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கவனம் செலுத்தி, அரச நிறுவனங்களின் வீண்விரயங்களை தவிர்க்கும் நோக்கில் நிதிகளை செலவிட வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக மின்சார விநியோகம், தொலைபேசி சேவை, எரிபொருள் கொள்வனவு உள்ளிட்ட ஏனைய சில சேவைகள் தொடர்பாக முறையான நிர்வாக நடவடிக்கைகளை கையாளுமாறும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்