கூட்டமைப்புக்கு அனந்தி அறிவுரை!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

கல்முனையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாங்கள் கூட்டமைப்பை சிதைப்பதற்காக கிழக்கில் களமிறங்கவில்லை. கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காகவே கிழக்கிற்கு விஜயம் செய்கின்றோமே தவிர வாக்குகளை சிதைப்பதற்காகவல்ல. வடக்கிலே ஸ்திரமான நிலையில் எமது கட்சி காலூன்றாத நிலையில் கிழக்கில் அரசியல் செய்வது நமது நோக்கமல்ல.

கூட்டமைப்பின் தலைமை உள்ள கிழக்கு மாகாணத்தில் பல இடங்கள் பறிபோயுள்ளன. இதன் நிமித்தமே நாங்கள் வடக்கு கிழக்கு என்று பாராமல் தமிழர்கள் என்ற நோக்கிலே குரல் கொடுப்பதற்காக வருகின்றோம். கிழக்கில் உள்ள மக்கள் தங்களுக்கான சரியான தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்