தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்: ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் மக்களுக்கு உரிய தீர்வை அரசாங்கம் வழங்கும் வரை முஸ்லிம் உறுப்பினர் எவரும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கப் போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸமாலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு காணப்படுகின்ற போதிலும் கூட அவ்வாறு இல்லை என கூறிக்கொண்டு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர்.

அதாவது தேர்தலை இலக்கு வைத்து, நாசகார செயல்களை மேற்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

இதேவேளை கிழக்கில் முஸ்லிம் – தமிழ் தரப்பினருக்கு இடையில் எழுந்துள்ள பிரச்சினைகளில் எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதுடன் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதற்கு பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளோம்” என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்