ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சம்பிக்க கருத்து

நாட்டிலுள்ள 50 இலட்சம் மக்களுக்கு தேவையான செயற்றிட்டங்களை செயற்படுத்தக்கூடிய தலைவர் யார் என்பதின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது, “பொது வேட்பாளரை களமிறக்குவதற்கு முன்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய  பரந்த அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டு, அக்கூட்டணியின் அரசியல், பொருளாதார, சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் அதனை செயன்முறைப்படுத்துவதற்கான தலைமைத்துவக் குழு என்பவற்றை நாட்டுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

குறித்த செயற்றிட்டத்தினை தொடர்ந்தே பொருத்தமான பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்

மேலும் ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களை முன்வைப்பதற்கு முன்னர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விடயம், நாட்டிலுள்ள  50 இலட்சம் மக்களுக்குத் தேவையான செயற்திட்டத்தினையும், அதனை செயற்படுத்தும் தலைவர் யார் என்பதையும் தீர்மானிப்பதாகும்” என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்