பங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவு – சிறப்பு பிரார்த்தனையில் ஜனாதிபதி பங்கேற்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விசேட பிரார்த்தனைகள், வழிபாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள Cathedral of Christ The Living Saviour தேவாலயத்தில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சபையின் பேராயர் டிலோராஜ் கனகசபை ஆண்டகை தலைமையில் இச்சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றதுடன், ஆயர் பெரி பிரோகியர் மற்றும் அருட்தந்தையர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அத்துடன், அமைச்சர் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்