யாழில் மீண்டும் பாதுகாப்பு தீவிரம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது.

இதனால் யாழ்ப்பாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞன் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.

மேலும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்குப் பின்னர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சடலம்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த இளைஞன் ஆவா எனப்படும் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்