நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது – ரணில்!

நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெவ்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி, ஐ.எஸ்.பயங்கரவாதம் மீண்டும் நாட்டில் தலைத்தூக்காத வகையில் ஒழிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் இவ்வாறானதொரு அச்சம் ஏற்படாமலிருப்பதற்கான சரியான வழிமுறை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அனைவரின் பிரார்த்தனை எனவும் இதற்காக வெவ்வேறு முறைகள் அவசியமானது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்