மூன்று மாதங்களை கடந்தும் மறந்துவிடமுடியாத காயம் – சோகத்துடன் நினைவுகூரப்பட்டது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நேற்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு சீயோன் தேவாலயத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த இருதயபுரத்தினை சேர்ந்த சரோன் மற்றும் சாரா ஆகியோரின் உறவினர்களின் இல்லத்தில் இந்த ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெற்றது.

மட்டக்களப்பு திமிலைதீவு கல்வாரி ஆராதனை சபையினால் இந்த ஆத்மசாந்தி பிரார்த்தனை நடாத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்