பெலியத்த பிரதேச சபையின் தவிசாளர் கைது

பெலியத்த பிரதேச சபையின் தவிசாளர் சிறில் முனசிங்கவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீது கடந்த 18ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டதாக சிறில் முனசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்துவத்கு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய பொலிஸ் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகிய சிறில் முனசிங்கவை, பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்