கோட்டாபய போட்டியிடுகிறாரென நான் கூறவில்லை- மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதாக கூறவில்லையென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “தொடர் குண்டுத் தாக்குல்கள் நடந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதில் காயமடைந்த பலர், இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், அந்த மக்கள் மீது அரசாங்கம் அக்கறை செலுத்தாமல் இருக்கின்றது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென ஒருவர் வலியுறுத்தும்போது, ​​மற்றொருவர் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்.

அதாவது பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மாத்திரமே குறிப்பிடுகின்றார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய நிறுத்தப்படுவாரென நான் எந்ததொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்