கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை பணத்துடன் பெண் ஒருவர் கைது
பெரும் தொகை சவுதி ரியாலுடன் இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 1,90 000 சவுதி ரியால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ரியாலின் இலங்கை பெறுமதி எட்டு கோடி 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபா என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை