பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள்! பலரை கொலை செய்ய திட்டமா?

பாகிஸ்தானிலிருந்து தென்னிலங்கை கடல் வழியாக பல்வேறு ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தென்னிலங்கையில் செயற்படும் பாதாள உலகக் குழுவினருக்கும் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் திட்டமிட்ட பல கொலைகளை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஆயுத பொதியில் ஆர்.பீ.ஜீ துப்பாக்கிகள், டீ 56 ரக துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் என்பன அடங்கும்.
டுபாயில் தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றினால் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பாகிஸ்தானில் செயற்படும் போதைப்பொருள் தரகர்கள் ஊடாக ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சிறையில் இருக்கும் பாதாள உலக தலைவர் கொஸ்கொட தாரக என்பவரே இந்த கொலை திட்டத்தின் பிரதான இலக்காக உள்ளதென தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி பாதாள குழு உறுப்பினர்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்