ஈச்சிலம்பற்றில் “சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம்” எனும் தொனிபொருளில் சிரமதானம்

திருகோணமலை மாவட்டம்
வெருகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15ற்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள இளைஞர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் 2பேர் வீதம் இணைந்து “வெருகல் சமூக அபிவிருத்தி ஒன்றியம்” எனும் பெயரில் கிராமத்தை முன்னேற்ற தாங்களே ஒன்றிணைந்து சமூகசேவைகளை பிரதிபலன் பாராது செய்து வருகின்றனர்.

கோவில் சிரமதானம்,இளைஞர்களுக்கான தலமைத்துவ பயிற்சி,தொழில்வழிகாட்டல்,பசுமைபுரட்சி மரக்கண்டு நடுதல்,இலவச கல்வி வழிகாட்டல் பயிற்சிகள்,மருத்துவமனை சிரமதானம் எஎன பல நலன்புரி சேவைகள் செய்து கொண்டே இருக்கின்றனர்.

அதில் ஒரு அம்சமாக கடந்த சனிக்கிழமை 20/07/2019 பிரதேச வைத்தியசாலை ஈச்சிலம்பற்றில் “சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம்” எனும் தொனிபொருளில் சிரமதானம் செய்துள்ளனர் இதில் வெருகல் பிரதேச செயலாளரும் கலந்துகொண்டார்.

அடுத்தகட்டமாக பல நலன்புரிதிட்டங்கள் செய்யவுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்க விடயம்.சமூக ஆர்வலர்கள் இவர்களை தொடர்பு கொண்டு நீங்களும் உங்கள் உதவி பங்களிப்பை செய்யமுடியும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்