நெளுக்குளம் வேம்படி விநாயகர் – முள்ளிப்புலவு விவசாயவீதி திருத்தத்திற்காக சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக நெளுக்குளம் வேம்படி விநாயகர் – முள்ளிப்புலவு விவசாயவீதி திருத்தத்திற்காக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் நிதியுதவியில் 0.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் கோரிக்கைக்கிணங்க, வவுனியாவின் நெளுக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட நெளுக்குளம் வேம்படி விநாயகர் – முள்ளிப்புலவு விவசாயவீதி திருத்தத்திற்காக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், தமிழ் அரசுக் கட்சியின் அகில இலங்கை துணைப் பொதுச்செயலாளரும், வவுனியா மாவட்ட தலைவருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் கம்பரெலிய பகுதி 02 திட்டத்தின் கீழ் தமிழ் அரசுக் கட்சியின் அகில இலங்கை துணைச் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்